ETV Bharat / state

வாய்ப்புகள் இருக்கு வேலை செய்ய ஆளு இல்லை: நலிவடைந்து வரும் பனைத் தொழில்! - பதநீர் சீசன்

வருமானத்திற்கும், வேலைக்கும் அதிக வாய்ப்பிருந்தும் பனைத் தொழில் செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை என்றும், அதனால் பனை சார்ந்த தொழில் நலிவடைந்து வருவதாகவும், இந்த தொழில் மீது அரசு பாராமுகம் காட்டி வருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் பனைத் தொழிலாளர்கள்.

வேலை செய்ய தான் ஆளு இல்லை
வேலை செய்ய தான் ஆளு இல்லை
author img

By

Published : Aug 18, 2021, 5:58 PM IST

திருநெல்வேலி: 'தென்னையை வச்சவன் தின்னுட்டு சாவான், பனையை வச்சவன் பார்த்துட்டு சாவான்' என்பது தமிழில் வழங்கி வரும் சொலவடை.

ஓங்கி உயர்ந்து வளர்வது மட்டுமில்லாமல், நீண்ட ஆயுளையும் கொண்டது பனை மரம். மரம் எனப் பொது வழக்கில் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் புல் இனத்தைச் சேர்ந்த தாவரப் பேரினம் பனை.

ஆப்பிரிக்காவை பூர்விமாகக் கொண்டதாக கூறப்படும் பனை மரத்தினை, மனிதன் புகலிடம் தேடி, புலம் பெயர்ந்த இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் சென்று பரப்பியதாக நம்பப்படுகிறது. ஆதி மனிதனிலிருந்து தொடங்கும் பனையின் பாரம்பரியத்திற்கு தமிழ் பண்பாட்டுனும் நீண்ட தொடர்பும் உண்டு.

பண்டைய தமிழ் இலக்கியங்கள், பனை ஓலையில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டே, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் பனை மரமே இருந்து வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பனை மரங்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

பருவம் சார்ந்த தொழில்

விவசாயத்திற்கு அடுத்த பாரம்பரிய தொழிலாக பனைத் தொழில் இருந்து வருகிறது. அதனாலேயே பனைத் தொழிலும் பருவம் சார்ந்த நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம் தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நடைபெறுகின்றது.

பனைத் தொழிலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை

நன்கு முதிர்ந்த ஒரு பனைமரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு, 150 லிட்டர் பதநீர், 20 கிலோ கருப்பட்டி, 15 கிலோ பனங்கற்கண்டு, 12 ஓலைகள், 10 கிலோ விறகுகள் கிடைக்கின்றன.

நெல்லை பகுதிகளில் மார்ச் தொடங்கி நடைபெறும் பனை ஏற்றத்தில் பதநீர் இறக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஓலை கழித்தல் எனப்படும், ஓலை வெட்டும் பணிகளும் சேர்த்தே நடைபெறுகின்றன. பனை ஓலைகளில் இருந்து பாய் பெட்டி, விசிறி உள்ளிட்ட பொருள்களும், மட்டைகளில் இருந்து பெட்டி, கூடை, நார் கட்டில் உள்ளிட்ட பொருள்களும் செய்யப்படுகின்றன.

தற்போது பனை மரம், பனை பொருள்கள் குறித்த விழிப்புணர்வுகள் மக்களிடம் அதிகம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பனையின் பாரம்பரியத்தை காக்க பல்வேறு அமைப்புகள் பனை விதைகளை நடும் பணிகளை செய்து வருகின்றன.

வேலை இருக்கு செய்ய ஆளில்லை

இந்த நிலையில், பனை தொழிலில் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் வேலை செய்வதற்கு ஆள்கள் இல்லை என பனை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

"பனைத் தொழிலில் பதநீர் இறக்கும் போது தான் நல்ல வருமானம். ஓலை வெட்டும் போது அதிக வருமானம் கிடைப்பது இல்லை, பனை ஏறுவதற்கு ஆள்களும் இல்லை. இப்போ, மர ஏறுரவங்களுக்கு வயசு 60 மேல ஆயிருச்சு. வயசு பசங்க இந்த தொழில்ல ஈடுபட அரசு ஊக்கம் கொடுக்கணும்" என்கிறார் மூத்த பனைத் தொழிலாளியான ராமர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெட்டப்படும் ஓலைகள், கன்னியாகுமரி, தோவளை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் வெடி உற்பத்திக்கும், அலங்காரப் பொருள்களுக்காக அதிகம் வாங்கிச் செல்லப்படுகின்றன.

"எனக்கு வயசு 70, நான் பதினஞ்சு வயசுல இருந்து இந்த தொழில் பாக்குறேன்.எங்களுக்கு பிறகு இந்த தொழில் செய்ய ஆளுங்க இல்லை. இளைஞர்களும் இந்த தொழிலுக்கு வர விரும்பவில்லை. இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வர, அரசாங்கம் பயிற்சி கொடுத்து தொழிலைக் காப்பாத்த வழி செய்யணும் என்கிறார் மூத்த பனை ஏறும் தொழிலாளி வைகுண்டராஜன்.

விவசாயம், கைதறிக்கு அடுத்து அதிகமானவர்கள் பனைத் தொழிலே செய்து வருகின்றனர். காலத்தின் கட்டாயத்தால் இந்த தொழில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

தென்னை மர வளர்ப்பிற்கு அரசு ஊக்கம் அளிப்பது போல, பனை வளர்ப்பினையும் ஊக்கப்படுத்தி, இளைஞர்களுக்கு மரமேற பயிற்சி அளித்து, பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் அரசுக்கு கேரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.