ETV Bharat / state

குட்டியை தேடி ஊருக்குள் வந்ததா..? மூன்று பேரை கடித்து குதறிய கரடி மர்ம முறையில் உயிரிழந்தது.. - பெண் கரடி

தென்காசி அருகே வனத்தில் இருந்து வெளியே வந்து மூன்று பேரை கொடூரமாக தாக்கிய கரடியை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டநிலையில் கரடி மர்மமான முறையில் உயிரிழந்தது.

மூன்று பேரை கடித்து குதறிய கரடி மர்ம முறையில் உயிரிழந்தது

author img

By

Published : Nov 8, 2022, 11:17 AM IST

நெல்லை: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அப்பகுதியில் மசாலா, காய்கறி விற்பதற்காக வியாபாரி வைகுண்டமணி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்து குதறி உள்ளது. வியாபாரி கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் அண்ணன் தம்பிகளான சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கையில் கரடியை விரட்டுவதற்கான எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் சைலப்பன் மற்றும் நாகேந்திரனையும் கரடி மிக கொடூரமாக கடித்து குதறி விட்டு வனப்பகுதிக்குள் ஓடி விட்டது.

மூன்று பேரை கடித்து குதறிய கரடி மர்ம முறையில் உயிரிழந்தது

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைலப்பன், நாகேந்திரன் இருவருக்கும் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சதைகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மூன்று பேரை கடித்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்கல் தேரி காட்டுப் பகுதியில் விட்டனர். இந்நிலையில், இன்று திடீரென அந்த கரடி மர்ம முறையில் உயிரிழந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் உயிரிழந்த கரடியை வனப்பகுதியில் தகனம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கரடி இறந்த காரணம் குறித்து கண்டறிவதற்காக மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே இது போன்று கரடி நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பிடிபட்ட கரடியை தங்கள் கண்முன்னே கொல்ல வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சம்பவத்தன்று வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குறிப்பாக குறிப்பிட்ட அந்த பெண் கரடி தான் அதிக அளவு ஊருக்குள் வந்து தொந்தரவு செய்வதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இறந்த கரடி 10 வயதான பெண் கரடியாகும். பொதுவாக குட்டியை தொலைத்த பெண் கரடி ஆக்ரோஷமாக குட்டியை தேடி அலையும் என்று கூறப்படுகிறது. அதுபோல இந்த கரடியும் குட்டியை தேடி அடிக்கடி ஊருக்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கரடி மர்மமான முறையில் உயரிழந்த சம்பவம் சர்ச்சை எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கரடி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். அதே சமயம் அளவுக்கு அதிகமான மயக்க ஊசி செலுத்திய காரணத்தாலும் கரடி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசியில் மூன்று பேரை கொடூரமாக கடித்துக்குதறிய கரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.