ETV Bharat / state

பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை..!

நெல்லை: சீவலப்பேரி அருகே உள்ள முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

infant baby
author img

By

Published : Aug 19, 2019, 5:14 AM IST

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே குளத்தின் கரையில் உள்ள முட்புதரின் நடுவே, பிறந்து சில மணி நேரங்களே ஆன அழகிய பெண் குழந்தை ஒன்றை யாரோ ஒருவர் வீசிச்சென்றுள்ளார். அந்த வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை...

குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், குழந்தையை பரிசோதித்த பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர் என சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் நெல்லை சீவலப்பேரி அருகே உள்ள குளத்தின் கரையில் பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்பு, குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Body:

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள குளத்தின் கரையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று மரத்தின் வேர்களுக்கு நடுவே உயிருடன் கிடந்து உள்ளது. அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் குழந்தையின் அழுகுரலை கேட்டு சென்று அக்குழந்தையை மீட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்து உள்ளனர்.. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், குழந்தையை பரிசோதனைக்கு பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.. மேலும் குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர்.. பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றனரா என சீவலப்பேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.