ETV Bharat / state

குதிரை மீது கொடூர தாக்குதல்; நெல்லையில் நடந்த வெறிச்செயல்!

திருநெல்வேலியில் பந்தய குதிரையை மர்ம நபர்கள் நள்ளிரவில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 30, 2023, 4:52 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் பகுதியில் பழனி தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் இவர் குதிரை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார் அந்த வகையில் திருநெல்வேலி பேட்டை பகுதியிலிருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குதிரை ஒன்றை வாங்கி இருக்கிறார் அதற்கு 20 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக முதலில் செலுத்தி உள்ளார். மேலும் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 29) ஆசையாக வாங்கிய குதிரையைத் தனது தொழுவத்தில் கட்டி உள்ள நிலையில் நள்ளிரவு 12 மணி வரை தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் குதிரையுடன் இருந்து இருக்கிறார்கள். அதிகாலையில் மீண்டும் குதிரையை வந்து பார்த்தபோது, தனுஷிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருநெல்வேலியில் பந்தயக் குதிரை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

இதையும் படிங்க: உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக தெலுங்கு மொழியில் தீர்ப்பு - கேரளாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் அமல் !

தொழுவத்தில் கட்டி வைத்திருந்த குதிரை, ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு நிலைகுலைந்து கிடந்தது. இந்த நிலையில் குதிரையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனுஷ் செய்வது அறியாது வேதனை அடைந்து உள்ளார். தொடர்ந்து நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக முதல் கட்டமாகத் திருநெல்வேலி டவுன் பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி நடமாடும் சிகிச்சை அளிக்கும் வாகனம் மூலமாக வந்த கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குதிரைக்கு முதலுதவி அளித்தனர்.

இதையும் படிங்க: ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்பட 120 பேருக்கு சம்மன் - செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த நகர்வு!

மேலும், உயர் சிகிச்சை அளிப்பதற்காக குதிரையை வாகனத்தில் ஏற்றி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குதிரைப் பந்தயம் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இது போன்ற கொடூரமான செயல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குதிரையின் உரிமையாளர் தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.

எதுவாயினும், வாயில்லா ஜீவன்களை இதுபோன்று ஈவு இரக்கம் இன்றி தாக்கிய கொடூரர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: Etv Bharat Exclusive: வனம் தின்னும் பிளாஸ்டிக்.. குப்பை மேட்டில் மேயும் வனஉயிர்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.