ETV Bharat / state

ஆண்டிபட்டியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை! - young women suicide in Andipatti

தேனி: ஆண்டிபட்டி அருகே இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை  ஆண்டிபட்டியில் இளம்பெண் தற்கொலை  இளம்பெண் தற்கொலை  young women suicide  young women suicide in Andipatti  young women suicide by jumping into well in Andipatti
young women suicide
author img

By

Published : Jan 1, 2021, 12:47 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கல்லடிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன், மகேஸ்வரி தம்பதியின் மகள் அழகுலட்சுமி (22). இவரை பழனியை அடுத்துள்ள சின்னகளயமுத்தூரைச் சேர்ந்த செல்வக்குமாருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கருத்து வேறுபாடு

இவர்களுக்கு ஜனனி (4), வர்ஷினி (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அழகு லட்சுமிக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மறு திருமணம்

கடந்த 10 நாள்களுக்கு முன் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்த அழகு லட்சுமி, தான் பழகி வந்த நபருடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளார். அங்கு விசாரித்த காவல்துறையினர், அழகு லட்சுமியை சமாதானம் செய்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகளுக்கு மனமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆண்டிபட்டி அருகே டி.வி.ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது சகோதரி கவிதா வீட்டில் அழகு லட்சுமியை பெற்றோர் தங்க வைத்துள்ளார்.

தற்கொலை

அங்கு வசித்து வந்த அழகு லட்சுமி மன உளைச்சல் காரணமாக, இன்று (ஜன.1) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த அழகு லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நேற்று திருடன்... இன்று திருடி... திருடர்களின் கூடாரமாகிறதா தென்மாவட்ட காவல்துறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.