தேனியில் திமுக சார்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ் செல்வன், சிறுத்தை பாதுகாக்கபட்ட முக்கிய விலங்கு. அது மின்சாரம் வைத்து கொல்லபட்டதா? அல்லது அடித்து கொல்லபட்டதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. ஆட்டுகிடை அமைத்தவர்கள் கைது செய்யபட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளரான ரவீந்தரநாத் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
அன்மையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கபட்ட உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனின் மனைவி தேனி தொகுதி எம்.பி க்கு நெருக்கமான உறவினர் என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யபட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
சிறுத்தை உயிரிழந்து சுமார் 1 மாத காலம் ஆன நிலையில் இன்னமும் பிரேத பரிசோதனை அறிக்கை வராமல் இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தான் கேட்ட போது, சிறுத்தை பிரேத பரிசோதனையில் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதால் அறிக்கை முழுமை பெறவில்லை, என வனத்துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் கால்நடை வளப்போர் சங்கத்தினருக்கு தமிழக அரசின் மீது சந்தேகம் இல்லை என்றும், அதிகாரிகளின் நடவடிக்கை மிகவும் மெதுவாக உள்ளதாகவும் கூறும் கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் முழுமையாக அறிக்கை கேட்டு உள்ளேன் எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் இல்லை' என அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் ஃபைன்!