தேனி: ஆண்டிபட்டி அருகே கானா விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மாநிலத்திலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போது கரோனா காலம் என்பதால், கரோனா தொற்று உள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணிநேரத்தில் நடனம்
இங்கு 170-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 400-க்கும் மேற்பட்ட செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலுவலகத்தில் பணியின்போது, சினிமா பாடலுக்கு அங்குள்ளவர்கள் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் செவிலி, ஆண் செவிலி, மருத்துவப்பணியாளர் மற்றும் கண்காணிப்பாளர் என சிலர் சமூக இடைவெளி இன்றி கை கோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடுகின்றனர்.
தவிர்க்கப்பட வேண்டியது
இது குறித்து பெயர் தெரிவிக்க இயலாத மருத்துவமனைப்பணியாளர்களிடம் விசாரித்தபோது, செவிலியர், கண்காணிப்பாளர் அறையில் அவ்வப்போது இவ்வாறு நடனம் ஆடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வீடியோ குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனை தொடர்புகொண்டு கேட்டதற்கு, 'இது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும்; இருப்பினும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கிறேன்' எனவும் தெரிவித்தார்.
அலுவலகத்தில் ஆடியது குறித்து செவிலி, கண்காணிப்பாளர் ஜென்னி ஜோஸ்வின் கூறுகையில், "உடன் பணிபுரிந்த பணியாளரின் பிறந்தநாளைக் கொண்டாடினோம். அலுவலகத்தில் இது போன்ற கொண்டாட்டங்களைத் தான் தவிர்த்து இருக்க வேண்டும்" என வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி