ETV Bharat / state

’வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்’ : மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார் - தேனி வீரபாண்டி கோயில் திருவிழா

தேனி மாவட்டத்தில் சிறப்புபெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் தேரோட்ட நிகழ்வை மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

’வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்’ : மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

author img

By

Published : May 14, 2022, 9:54 PM IST

தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகின்ற மே 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.‌ இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று(மே14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

’வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்’ : மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

மேலும், ஆரஞ்சு வண்ணப் பட்டு உடுத்தி திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு எழுந்தருளிய கௌமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தின் முதல் நாளான இன்று நிலையில் இருந்து பக்தர்களால் இழுத்து வரப்பட்ட தேர் கிழக்கு கோபுர வாயிலில் அம்மன் சன்னதி முன்பாக நிறுத்தப்பட்டது.

இந்தத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலின் தெற்கு வாயில் மற்றும் மேற்கு வாயில் வழியாக சுற்றி வரும் திருத்தேர் வரும் 16 ஆம் தேதி நிலைக்கு வந்தடையும். மேலும் நான்கு நாட்களுக்கு திருத்தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மனுக்கு 17 ஆம் தேதி, ஊர் பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் திருவிழா நிறைவுபெறும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அஞ்சியதா திமுக...? - திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் வைபவம் நிறுத்தம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.