ETV Bharat / state

முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி: மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து, பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

_vagai_dam_water_opened by OPS
_vagai_dam_water_opened by OPS
author img

By

Published : Aug 31, 2020, 1:44 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது, வைகை அணை. 71 அடி உயரம் உள்ள வைகை அணையை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் இருக்கின்றனர். வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக சாகுபடிக்கும், அக்டோபர் மாதம் இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாண்டு போதிய பருவ மழை இல்லாத காரணத்தினால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் பெய்த கனமழையால், முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் வைகை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் 59.51 அடியாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் பயன்பெறும் வகையில், முதற்போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இன்று முதல் 120 நாள்களில், முதல் 45 நாள்களுக்கு 900 கன அடி நீரும், பிறகு நீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனம் வைத்து, பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக தண்ணீரும் திறக்கப்படயிருக்கிறது.

முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வைகை அணையில் இருந்து இன்று (ஆக.31) தண்ணீர் திறந்து வைத்தார். முன்னதாக அணையில் பூஜை செய்யப்பட்டு பெரிய மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்த்தூவி வைகை நீரை வரவேற்றனர்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.