தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகின்றது. அதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சாளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தலையாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தலையாறு அருவியானது கொடைக்கானல் மலையை ஒட்டி அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான அருவியாகும்.
தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினால் அந்த அருவியில் விழுகின்ற தண்ணீரானது பால் போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை எனும் இடத்திற்கு அருகாமையில் இதன் அழகை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளாமானோர் குவிகின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தலையாறு அருவியின் அழகைக் கண்டு ரசித்து, புகைப்படம், செல்போனில் செல்பி எடுத்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: 38ஆவது நாளாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை