ETV Bharat / state

வெளுத்து வாங்கிய கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி! - theni heavy rain

தேனி: ஆண்டிபட்டி, பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
author img

By

Published : Sep 14, 2019, 7:34 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியேற முடியாத நிலையில் இருந்தனர்.

கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

பின்பு, மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்யத்தொடங்கியது. இந்தக் கனமழையானது தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, கருவேல்நாயக்கன்பட்டி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, ஜக்கம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் புவியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று, கனமழை தொடர்ந்து பெய்துவந்தால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் விரைவில் உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக விவசாயிகள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவந்துள்ளது.

Intro: தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
Body: தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று காலையிலும் அதேபோல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்தது.
இந்தக் கனமழையானது தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழனிசெட்டிபட்டி, கருவேல்நாயக்கன்பட்டி, அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, ஜக்கம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் புவியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Conclusion: இதே போன்று கனமழை தொடர்ந்து பெய்யுது வந்தால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் விரைவில் உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.