தேனி: பெரியகுளம் பகுதில் உள்ள காயிதே மில்லத் நகர் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த நாயின் உடம்பில் இன்று (டிச.17) தேசியக்கொடியை மர்ம நபர்கள் கட்டி விட்டுதால் பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாடெங்கும் புனிதமாக கருந்தும் தேசியக்கொடியை, இவ்வாறு இந்திய மக்களின் எண்ணங்களை இழிவுபடுத்தும் வகையில் மர்ம நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டது பெரியகுளத்தில் பொதுமக்கள் இடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது கட்டிய தேசியக்கொடியை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதோடு, காவல்துறை உதவியுடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தேசியக்கொடியை அவமதிப்பு செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: "ரேஷன் அரிசி சரியில்லை சாமி" கடலூர் கலெக்டரிடம் புகார் கூறிய பெண்கள் - வீடியோ!