நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது இன்று மாட்டு வண்டியில் கரும்பு தட்டையுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரான பல்லவி பல்தேவிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு குரல் கொடுப்பேன் என்றும், இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.