ETV Bharat / state

தேனியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது: ஐந்து மாட்டு வண்டிகள் பறிமுதல்!

தேனி: மஞ்சளாறு அணை ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

sand
sand
author img

By

Published : Aug 27, 2020, 6:41 PM IST

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது மஞ்சளாறு அணை. திண்டுக்கல், தேனி ஆகிய இரண்டு மாவட்ட பாசன நிலங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கின்ற இந்த அணையின் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

theni manjalar dam two arrested for illegally sand smuggling
மாட்டு வண்டிகளில் மணல்

காவல்நிலையம்

அதனடிப்படையில் மஞ்சளாற்று பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

இதில் தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ், காசிமாயன், குனசேகரன் ஆகிய மூன்று பேரும் தப்பியோடினர். அதே பகுதியைச் சேர்ந்த ரூபன், மருது என்ற இருவரை கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய ஐந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரையும் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மூவரையும் தீவிரமதாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அழித்த காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.