தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவரது மகன் வெள்ளைசாமி (23). இவர் ஐ.டி.ஐ.யில் படித்து முடித்துவிட்டு தற்போது இந்த கரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை வெள்ளைச்சாமி ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும் அந்த பெண் மற்றொரு நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெள்ளைச்சாமி, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் உடலை மீட்ட பெற்றோர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக உட்படுத்தி ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலிக்காக பட்டுபுடவை... காசுக்காக நகை; தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடியவர் வாக்குமூலம்!