தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரமடைந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் அனைத்து இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது.
கடந்த சில தினங்கள் முன்பு மழை பெய்யாமல் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இருந்தது. இந்நிலையில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது பரவலாக சாரல் மழை பெய்து வருகின்றது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது என பொதுமக்களும், நிலத்தடி நீர்மட்டம் பெருகும் என விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.