ETV Bharat / state

ரயில் பாதை தாமதத்திற்கு அமைச்சர்தான் காரணம் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

author img

By

Published : Mar 29, 2019, 7:50 PM IST

தேனி: மதுரை- போடி அகல ரயில் பாதை திட்ட தாமதத்திற்கு காரணம் தேனியில் உள்ள அமைச்சர் 15 விழுக்காடு கமிஷன் கேட்கிறதுதான் காரணம் என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்தபட்ச வருமானம் திட்டத்தில் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்க முயற்சிகளை மேற்கொள்வோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் பணிகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் விரிவுப்படுத்தவில்லை. குறிப்பாக தேனியில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர் ஆந்திராவில் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரரிடம் 15 விழுக்காடு கமிஷன் கேட்டுள்ளார். அதன் காரணமாகவே பணிகள் தாமதம் ஆகிறது என குற்றம்சாட்டினர்.

மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு ஆறுமாத காலத்திற்குள் போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகளை முடிப்பேன் என்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். தேனி அடுத்த பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் சூற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை என்றால் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவேன், என்றார்.

Intro: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்ட தாமதத்திற்கு காரணம், தேனியில் உள்ள அமைச்சர் 15% கமிஷன் கேட்பதாலே என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு.

Body: தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், குறைந்தபட்ச வருமானம் திட்டத்தின் கீழ், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவோம்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் தேனி மாவட்டத்திற்கான மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சியாளர்கள் பணிகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக தேனியில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர் ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏவான, ரயில்வே ஒப்பந்ததாரரிடம் 15 சதவீதம் கமிஷன் கேட்டுள்ளார். அதன் காரணமாகவே பணிகள் தாமதம் ஆனது என குற்றம் சாட்டினர்.
மேலும் தான் வெற்றி பெற்ற பிறகு ஆறு மாதத்திற்குள் போடி - மதுரை அகல ரயில்பாதை பணிகளை முடிப்போம் என்றார்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக நிச்சயம் உயர்த்தப்படும்.
தேனி மாவட்டம் மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும் எனவே கேரளா போன்ற ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இதை மாற்றவேன் என்றார்.
மேலும் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை என்றால் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவோம். கண்ணகி கோவில் செல்லும் பாதையை அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமல்லாமல், தமிழக கேரள எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.
தேர்தல் வெற்றிக்குப் பின்பு எனது குடியுரிமையை மாற்ற மாட்டேன். தேனியிலே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இங்கேயே தங்கி பணிகளை மேற்கொள்வேன் என்றார்.
மக்களிடம் சில கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க உள்ளனர். பணம் கொடுக்கும் கட்சியினரிடம் மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட வேண்டும் என்று பேசினார்.

Conclusion: பேட்டி : ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்கிரஸ் வேட்பாளர், தேனி பாராளுமன்ற தொகுதி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.