இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், "தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 43 பள்ளிகளைச் சேர்ந்த 326 பள்ளி வாகனங்கள், உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 58 பள்ளிகளைச் சேர்ந்த 273 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 101 பள்ளிகளை சேர்ந்த 599 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஆய்வினைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குவது குறித்து ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.
இக்கூட்டாய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.