ETV Bharat / state

தமிழ்நாடு காப்புகாட்டிற்குள் பாதை அமைத்த கேரள நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம்

தேனி: தேவாரம் சாக்குளத்து மெட்டு மலையிலுள்ள தமிழ்நாடு காப்புகாட்டிற்குள் கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக பாதை அமைத்திருப்பதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு காப்பு காட்டிற்குள் பாதை அமைத்த கேரள நிறுவனம்

author img

By

Published : Jan 27, 2021, 12:52 AM IST

தேனி மாவட்டம் தேவாரம் அருகே சாக்குளத்து மெட்டு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. தேவாரத்திலிருந்து டி.மேட்டுப்பட்டி வழியாக 12கி.மீ., தூரத்தில் கேரளாவை இணைக்ககூடிய இந்த மலைச் சாலையை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால், சாக்குளத்து மெட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதாகவும், வன விலங்குகள், நீரோடைகள் பாதிக்கப்படும் என்பதால் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், தனது பட்டா நிலத்திற்கு செல்வதற்காக தமிழ்நாடு வனப்பகுதியில் புதிதாக பாதை அமைத்திருப்பதாக ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று (ஜன.26) கம்பம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தலைவர், “சாக்குளத்து மெட்டு காப்புகாட்டிற்குள் சர்வே எண் 87/1-ன் மேற்குப்பகுதி பொள்ளாச்சி ஆர்.வி.எஸ்.மாரிமுத்து என்பவருக்கும், கிழக்குப் பகுதி தமிழ்நாடு வனத் துறைக்கும் சொந்தமானதாக இருக்கிறது.

இதற்கு அடுத்து வரும் சர்வே எண் 17/1/ன் படி மேற்குப்பகுதி தமிழ்நாடு வனத் துறைக்கும் கிழக்குப்பகுதி அதே பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர்.வி.எஸ் மாரிமுத்து என்பவருக்கும் சொந்தமானதாக இருக்கிறது. மேற்கண்ட இரு சர்வே எண்களிலும் இந்த சர்வே எண்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் 87/2, 17/2 ஆகிய இரு சர்வே எண்களின் கீழ்வரும் 59 ஏக்கர் கேரளாவில் உள்ள பாரக்காட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு முரளி என்பவரால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

மேற்படி முரளி, வெஸ்டாஸ் ஆர்.ஆர்.பி எனப்படும் காற்றாலை நிறுவனத்தைச் சார்ந்த சாமிநாதன் என்பவரிடம் கடந்த 1998ஆம் ஆண்டு கிரையம் வாங்கியிருக்கிறார். அப்படி பாரக்காட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்ட நிலம் காப்புகாட்டிற்குள் வருகிறது என்று தெரிந்தும், சட்டவிரோதமாக தொடர்ச்சியாக 20 நாள்களுக்கும் மேலாக ராட்சத பொக்லைன்களைக் கொண்டு பாதையை சீர் திருத்தம் செய்வது, பாறைகளை உடைப்பது என அத்துமீறிய பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தேனி மாவட்ட வனத் துறையின் பரிபூரண ஆசியோடு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

அந்நிறுவனம் தனக்கு சம்பந்தமில்லாத தன்னுடைய பட்டா நிலத்தில் வராத சர்வே எண் 87/1, 17/1 ஆகியவை முறையே ஆர்.வி.எஸ் மாரிமுத்து என்பவரின் பட்டா நிலத்திற்குள்ளும், காப்புகாட்டிற்குள் வரும் வன நிலத்திலும் ராட்சத பொக்லைன்களைக் கொண்டு 2.75 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைத்து இருக்கிறது. இவ்வளவு தூரத்தில் சாலை அமைப்பதற்காக யாரிடம் அனுமதி பெற்று அந்நிறுவனம் பாதை போட்டது என்பதற்கான விடை தெரிய வேண்டும். பொதுவாக வனப்பகுதிக்குள் சாலை போடுவதற்கு என்று இருக்கும் சட்டங்கள் குறித்து எவ்வித புரிதல் இல்லாமலும், மத்திய, மாநில வனத் துறையிடமிருந்து முறையான அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக பாராக்காட் நிறுவனம் செய்த செயல் மாவட்ட வன அலுவலருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

போடப்பட்ட சாலையில் 40 விழுக்காடு மாரிமுத்து என்பவரது பட்டா நிலத்திலும், 60 விழுக்காடு காப்புகட்டிற்குள்ளும் இருக்கிறது. இந்த பாதையை அமைப்பதற்காக மரம் வெட்டும் நவீன கருவிகளைக் கொண்டு நூறு ஆண்டுகால பழமையான சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டு மரங்கள் வெட்டி அப்புறப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாரக்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான சர்வே எண் 87/1-ல் முறைப்படி வாங்கவேண்டிய கட்டட வரைபட அனுமதி ஏதுமின்றி கட்டுமானம் கட்டுவதற்காக சிமெண்ட் தூண்கள் கடந்த 10 நாள்களுக்குள் எழுப்பப்பட்டிருக்கிறது.

நிறுவனத்தின் முறையற்ற இந்த சட்டவிரோத எதேச்சதிகார செயலுக்கு துணை போனது யார்? என்பது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்த அத்துமீறலுக்கு பின் இருக்கும் தேனி மாவட்ட அலுவலர்களை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்” என்றனர். மேலும், இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் உதவியுடன் சட்ட ரீதியாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரங்கணி மலைப்பாதையை திறக்கக்கோரி போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.