தேனி: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறை சார்பில் பொதுவெளியில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 2,765 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சென்னையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கரோனா தாக்கம் கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: முல்லை பெரியார் அணை நீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!