தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று முன்தினம் 121 அடியை எட்டியது.
இந்நிலையில் இன்று காலை அணையின் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீர்வரத்து 1,45,000 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு