தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக காரில் வந்த இருவரை சோதனை செய்தததில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூருவில் இருந்து தேனிக்கு விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக குட்காவை கடத்திவந்த ரகுமான்(40), செந்தில்(42) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேவதானப்பட்டி காவல்துறையினர், இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரி முழுவதும் குட்கா சப்ளை செய்த நபர் அதிரடி கைது!