தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அக்.05,2020இல் வருகை தந்தார். பெரியகுளத்தில் இருந்து தேனி வழியாக சென்றுகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் கூடிய அதிமுகவினர் "நாளைய முதல்வரே ஓபிஎஸ்" என்று 100 அடியில் ஃப்ளெக்ஸ் வைத்து வரவேற்பு அளித்தனர்.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற மோதல் நிலவிவரும் சூழலில் தேனியில் அதிமுகவினர் ஃப்ளெக்ஸ் வைத்து வரவேற்பு அளித்தது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. முன்னதாக, "தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே, எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!" என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!' - பொடிவைத்து ட்வீட் செய்த ஓ.பன்னீர்செல்வம்