ETV Bharat / state

‘ஜல் ஜீவன் திட்டம் தேனி மக்களுக்கு வரப்பிரசாதம்’- ஓ.பி.எஸ். பெருமிதம்!

தேனி: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டமானது தேனி மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார்.

author img

By

Published : Nov 6, 2020, 1:09 PM IST

தேனி மாவட்ட ஜல் ஜீவன் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட ஜல் ஜீவன் ஆலோசனை கூட்டம்

மத்திய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் தேனி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (நவ.06) நடைபெற்று வருகிறது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், “ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊராட்சிகளில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தேனி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், தேனி மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதன் மூலம் தனி மனித குடிநீர் தேவை நிவர்த்தியடைவதோடு மட்டுமல்லாது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தண்ணீர் தேவையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், அடுத்து வரும் 30 ஆண்டுகளில் உருவாகும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தான் இந்த திட்டத்தை 100 விழுக்காடு மக்களுக்குச் சென்றடைய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், தேனி மாவட்டத்திலுள்ள எட்டு ஒன்றியங்கள் வாரியாக மொத்தமுள்ள 130 ஊராட்சிமன்ற தலைவர்களுடனும், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தற்போது போடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிமன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: மலைக்கிராம மக்களின் குறைகளை நேரில் சந்தித்து கேட்டறிந்த துணை முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.