எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்றாண்டானதைத் தொடர்ந்து அதன் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகிறது. 'முத்திரை பதித்த மூன்றாண்டு-முதலிடமே அதற்குச் சான்று' என்கிற தலைப்பில் அரசின் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தேனி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
பின்னர் அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த அதிமுக அரசின் சாதனை விளக்கங்கள் இடம்பெற்றிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்! - குவியும் பாராட்டுகள்