ETV Bharat / state

புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர்

author img

By

Published : Dec 4, 2020, 5:39 PM IST

தேனி, ஆண்டிபட்டி, கடமலை - மயிலை ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக பகுதிகளுக்காக ரூ.162.43கோடி மதிப்பில் வைகை அணையில் இருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

OPS inauagarate water scheme in theni
புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர்

தேனி: தேனி ஆண்டிப்பட்டி, கடமலை- மயிலை ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக பகுதிகளுக்காக ரூ.162.43 கோடி மதிப்பில் வைகை அணையிலிருந்து புதிய கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, தேனி ஒன்றியங்களுக்கு தற்போது 9.50 மில்லியன் லிட்டர் தண்ணீர்,10 கூட்டுகுடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த 3 ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக குடியிருப்பு பகுதியின் எதிர்கால மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு 1,77,920 பேர் பயனடையும் வகையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வைகை அணையிலிருந்து 163.42 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 10.70 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று ஆண்டிப்பட்டி அருகேயுள்ள திருமலாபுரம்- பந்தூவார்பட்டி பிரிவில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட, ஓ. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்நிகழ்வில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

OPS inauagarate combined water scheme in theni
அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர்

இதையும் படிங்க: அரசியலுக்கு யார் வந்தாலும் அதிமுகவை அசைக்கவோ முடியாது: ஓ.பி.எஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.