ETV Bharat / state

மர்மமான முறையில் மூதாட்டி மரணம் - dead

தேனி: உழவர் சந்தையில் மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி
author img

By

Published : Jun 22, 2019, 9:42 AM IST

தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது உழவர் சந்தை. தினமும் காலை ஐந்து மணி முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கும் இந்தச் சந்தையின் நுழைவு வாயில் அருகே வயதான பெண் ஒருவர் இன்று சடலமாக கிடந்துள்ளார். அதிகாலை சந்தைக்கு சென்றவர்கள் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வாயில் பசை தடவிய, கயிறால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவர் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி சாந்தியம்மாள் (58) எனத் தெரியவந்தது. கணவரை பிரிந்து தனியே வாழ்ந்துவரும் இவர், உழவர் சந்தையில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தேனி நகர் காவல் துறையினர் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:         தேனி உழவர்சந்தையில் மர்மமான முறையில் மூதாட்டி மரணம். முகத்தில் பசை தடவி, கயிறால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை.
Body: தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது உழவர் சந்தை. தினமும் காலை 5மணி முதல் பரபரப்பாக இயங்கத்தொடங்கும் இந்த சந்தையின் நுழைவாயில் அருகே வயதான பெண் ஒருவர் இன்று சடலமாக கிடந்துள்ளார். அதிகாலை சந்தைக்கு சென்றவர்கள் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாயில் பசை தடவிய, கயிறால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
         இறந்தவர் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி சாந்தியம்மாள்(58) எனத்தெரியவந்தது. கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வரும் இவர், உழவர்சந்தையில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி நகர் காவல் துறையினர் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
         Conclusion: நகரின் மத்தியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.