ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்ஃபானுக்கு 5 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபானுக்கு ஐந்து நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கி, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

irfan_
author img

By

Published : Oct 9, 2019, 9:45 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் சிபிசிஐடியிடம் அளித்த தகவலின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ராகுல், அவரின் தந்தை டேவிஸ், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவரான தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை முகமது சபி, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, வேலூர் சிபிசிஐடியினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதில் மாணவர் இர்ஃபான் மட்டும் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவர் இர்ஃபானை இன்று ஆண்டிபட்டியில் உள்ள, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார். அதன் பிறகு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் இர்ஃபானை சிபிசிஐடியினர் ஆஜர்படுத்தினர்.

மாணவர் இர்ஃபான்

அதனை விசாரித்த நீதிபதி வரும் 15ஆம் தேதி வரை, இர்ஃபானுக்கு மேலும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாணவர் இர்ஃபான் தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே ஓரிரு நாட்களில் சிபிசிஐடியினர் இர்ஃபானை விசாரணைக்கு அழைக்க மனுதாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 'வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்'

‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தேசத்திற்கான பிரச்னை’ - அன்புமணி ராமதாஸ்

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பானுக்கு 5நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு. வரும் அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மாணவன் ராகுல் அவரின் தந்தை டேவிஸ், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் பிரவின் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவருவான தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை முகமது சபி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் மாணவர் இர்பான் மட்டும் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவர் இர்பினை இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார். இதனையடுத்து தேனிக்கு அழைத்து வந்த காவல்துறையினர் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அதன் பிறகு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
அதனை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை மேலும் 5,நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மாணவர் இர்பான் தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.

Conclusion: இதற்கிடையே ஓரிரு நாட்களில் சிபிசிஐடி போலீசார் மாணவர் இர்பானை விசாரணைக்கு அழைக்க மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.