ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ஜாமீன் மனு ஒத்திவைப்பு! - மாணவர் உதித்சூர்யா

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகியுள்ள நான்கு பேரின் ஜாமீன் மனுவை வரும்14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

neet-exam-impersonation-case
author img

By

Published : Oct 11, 2019, 10:45 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் அவரது தந்தை சரவணன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு பேரது ஜாமீன் மனு இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பன்னீர்செல்வம் முன் மாணவர்கள் பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. நீட் தேர்வை முறையாக எழுதி கலந்தாய்வில் அரசு கல்லூரி கிடைக்காத காரணத்தால் தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கல்லூரி முதல்வர் முன்னிலையில்தான் மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. சிறையில் உள்ள பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோருக்கும் ஆள்மாறாட்டத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வாதிட்டனர்.

மாணவர் உதித்சூர்யா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, சிறையில் இருக்கும் மாணவர்களின் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டிதான் சான்றிதழ்களை சரிபார்த்தனர் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டியிடம் விசாரணை செய்யாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிபிசிஐடி போலீசார், விசாரணைக்காக சம்மன் அனுப்பியதாகவும், விரைவில் அந்த கமிட்டியிடம் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்வோம் என கூறியதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் பிரவீன், ராகுலின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு..
கைது செய்யப்பட்ட மாணவர்களின் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குழுவை விசாரிக்காதது ஏன் - சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி கேள்வி? நால்வரது ஜாமின் மனு வரும் 14ஆம் தேதி ஒத்தி வைப்பு.
Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் அவரது தந்தை சரவணன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு தேனி மாhவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கான ஜாமீன் மனு இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜரான மாணவர்கள் பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர்களின் வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, நீட் தேர்வு முறையாக எழுதி கலந்தாய்வில் அரசு கல்லூரி கிடைக்காத காரணத்தினால் தனியார் கல்லூரியில் அக்கல்லூரி முதல்வர் முன்னிலையில் தான் மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. சிறையில் உள்ள பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோருக்கும் ஆள்மாறாட்டத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வாதிட்டனர்.
இதையடுத்து நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மாணவர் உதித்சூர்யா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது, தற்போது சிறையில் இருக்கும் மாணவர்களின் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட கமிட்டி தான் சான்றிதழ்களை சரிபார்;ததனர். அந்த குழுவிடம் விசாரணை ஏன் செய்யவில்லை என்று கேள்வி நீதிபதி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிபிசிஐடி போலீசார், விசாரணைக்காக சம்மன் அனுப்பியதாகவும், விரைவில் அந்த கமிட்டியிடம் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்வோம் என கூறியதை தொடர்ந்து ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Conclusion: பேட்டி : முருகதினகரன் (மாணவர்கள் ராகுல், பிரவீனின் வழக்கறிஞர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.