ETV Bharat / state

இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் பறிமுதல்! - theni

தேனி: கம்பத்தில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் ஆயிரம் சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் பறிமுதல்!
author img

By

Published : Apr 3, 2019, 10:28 PM IST

தேனி மாவட்ட நாடாளுமன்றத்தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கம்பம் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் பறிமுதல்!

அதனடிப்படையில் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சை நிற சேலைகள் மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சேலைகள் திருப்பூரிலிருந்து கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.           03.04.2019.

                கம்பத்தில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் ஆயிரம் சேலைகள் பறிமுதல், பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

   தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கம்பம் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கம்பம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் மூடை, மூடையாக சேலைகள் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை பொறிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பச்சை நிற சேலைகள் பண்டல், பண்டல்களாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

. மேலும் திருப்பூரில் இருந்து கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கான ரசீதினை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட  சேலைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 50ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_03a_03_ADMK SYMBOL SAREE SIEZE_SCRIPT_7204333

2)      TN_TNI_03_03_ADMK SYMBOL SAREE SIEZE_VIS_7204333

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.