ETV Bharat / state

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி - மேற்கு தொடர்ச்சி மலை

தேனி: மேற்குத் தொடர்சி மலை பகுதியில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Jul 21, 2020, 11:58 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கொடைக்கானல் மலைப்பகுதி திகழ்கிறது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பெய்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட மலைத் தொடரில் நேற்று (ஜூலை 20) கனமழை பெய்ததால் வறண்டு காணப்பட்ட கும்பக்கரை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கும்பக்கரை அருவியின் கீழ் பகுதியில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிறைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.