ETV Bharat / state

கண்ணகி கோயிலில் முப்பெரும் விழா கொண்டாட்டம் - கேரளா

தேனி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட முப்பெரும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கண்ணகி அம்மன்
author img

By

Published : Apr 19, 2019, 7:32 PM IST

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோட்டம். தமிழக கேரள எல்லைப் பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 830 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் அதே நாளில் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான விழா தமிழ்நாடு, கேரள மாநிலங்களை சேர்ந்த பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி தேவி அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கு மேளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தமிழக - கேரளாவை சேர்ந்த இரு மாநில பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் தமிழக பாதையான கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாகவும், ஜீப் மூலமாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கேரள மாநிலம் குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக வர தொடங்கினர்.

பெரியார் புலிகள் பாதுகாப்பு சரணாலய வனப்பகுதியில் கண்ணகி கோவில் இருப்பதால் அங்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. புகையிலை, சிகரெட் போன்ற போதை வஸ்துகளும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தமிழர் தெய்வமாக கருதும் கற்புக்கரசி கண்ணகி கோவில் தமிழக பகுதியில் அமைந்திருந்தாலும், அங்கு சென்று வருவதற்கான வழி கேரள மாநிலத்தில் உள்ளதால், அம்மாநில வனத்துறையினரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. எனவே தமிழக பாதையான பளியங்குடி வனப்பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்பதே தமிழக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

முப்பெரும் விழா காணொளி

Intro: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவில் முப்பெரும் விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

Body: தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள
விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோட்டம். தமிழக கேரள எல்லைப் பகுதியில் சுமார் 4,830 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் அதே நாளில் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான விழா இன்று தமிழக கேரள பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி தேவி அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கு மேளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
தமிழக - கேரளாவை சேர்ந்த இரு மாநில பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் தமிழக பாதையான கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக நடந்து சென்றும், கேரள மாநிலம் குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக ஜீப் மூலமாகவும் கோவிலுக்கு வர தொடங்கினர்.
பெரியார் புலிகள் பாதுகாப்பு சரணாலய வனப்பகுதியில் கண்ணகி கோவில் இருப்பதால் அங்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு இரு மாநில அரசுகள் சார்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. புகையிலை, சிகரெட் போன்ற போதை வஸ்துகளும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தெய்வமான கற்புக்கரசி கண்ணகி கோவில் தமிழக பகுதியில் அமைந்திருந்தாலும், அங்கு சென்று வருவதற்கான போக்குவரத்து கேரள மாநிலம் வழியாக உள்ளதால், அம்மாநில வனத்துறையினரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளது.
எனவை தமிழக பாதையான பளியங்குடி வனப்பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும் என்பதே தமிழக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Conclusion: வருடத்தில் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் இவ்விழாவில் தமிழகம் - கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

பேட்டி : 1)சத்யபாமா (சேலம்).
2)ராஜேந்திரன் (மதுரை)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.