ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள்: அறிவுரை வழங்கிய நம்மவர் கமல்! - ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள்

தேனி: இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் சென்ற மூன்று இளைஞர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறிய காணொலி வைரலாகிவருகிறது.

ஒரே இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் மூன்று இளைஞர்கள் - அறிவுரை கூறிய கமல்

author img

By

Published : Dec 15, 2020, 9:06 AM IST

Updated : Dec 15, 2020, 9:21 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பரப்புரையை மதுரையிலிருந்து நேற்று முன்தினம் (டிச. 13) தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார்.

இரண்டாம் நாளான நேற்று (டிச. 14) தேனி மாவட்டத்திற்கு வருகைதந்த கமல்ஹாசனை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி பகுதியில் அவரது ரசிகர்கள், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆண்டிபட்டியிலிருந்து தேனி வந்த கமல்ஹாசனை பார்ப்பதற்காக அவரது வாகனத்திற்கு பின்னால் ரசிகர்கள் ஏராளமானோர் படையெடுத்துவந்தனர்.

இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் மூன்று இளைஞர்கள் - அறிவுரை கூறிய கமல்

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த கமல்ஹாசனை அசுரவேகத்தில் பின்தொடர்ந்தனர். இதனைப் பார்த்த கமல்ஹாசன் தனது வாகனத்தின் கண்ணாடியைக் கீழே இறக்கி, இருசக்கர வாகனத்தில் மூவர் செல்கிறீர்களே, பார்த்துச் செல்லுங்கள் என அறிவுரை கூறிச் சென்றார்.

இவை அனைத்தும் பின்னால் வாகனத்தில் வந்த நபர் தனது செல்போனில் காணொலி பதிவுசெய்தார். கமல்ஹாசன் அறிவுரை கூறிய இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க...சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

Last Updated : Dec 15, 2020, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.