தேனி ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணை அதன் முழுக் கொள்ளளவான 71 அடியில் 70 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்தை உபரிநீராக வெளியேற்றி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் ஏழு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை வரை 2,257 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கண்மாய் பாசனத்திற்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் அதிகரித்து திறக்கப்பட்டது.
இதையும் படிங்க:இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்: பொதுமக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்