தேனி எடமால் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் குருசாமி. மருந்தகம், பருத்தி ஆலை நடத்தி இவர், வருமான வரிக் கணக்குகளை சரிவர சமர்ப்பிக்கவில்லை என்று வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றது.
இதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர், தொழிலதிபர் குருசாமிக்கு சொந்தமான தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் கேஷவ் மெடிக்கல்ஸ், அல்லிநகரத்தில் உள்ள ஜெயலட்சுமி பருத்தி ஆலை ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் தொடங்கிவைத்த திட்டம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவருக்குப் பிணை