ETV Bharat / state

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்த பயிற்சி மருத்துவர்கள்!

தேனி: மத்திய அரசுக்கு எதிராக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு, பயிற்சி மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

medical students protest
author img

By

Published : Aug 15, 2019, 8:49 AM IST

மருத்துவத்துறையில் மருத்துவர்கள் அல்லாதவர்களை பணியில் அமர்த்தும் மத்திய அரசின் முடிவை ரத்து செய்யவும்,
மருத்துவப் படிப்பில் நெக்ஸ்ட் தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தியும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாவது நாளான நேற்றைய போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இணைந்து போராடினர்.

மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் அமர்ந்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராடினர். இதனால் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவரச சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது.

பயிற்சி மருத்துவர்களும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பு!

Intro: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
8 வது நாளாக தொடரும்
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
மாணவர்களுக்கு ஆதரவாக
பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்பு.Body:மருத்துவத்துறையில் மருத்துவர்கள் அல்லாதவர்களை பணியில் அமர்த்தும் மத்திய அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தகுதி தேர்வை கைவிட வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவ - மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியிலும் கடந்த ஒரு வாரமாக மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
8வது நாளான இன்றைய போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்களும், மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவின் நுழைவாயிலில் அமர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் போலி மருத்துவர்களால் ஏற்படும் உயிர்ச்சேதத்தை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக கோஷம் எழுப்பப்பட்டது.
மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் 100 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சட்டையில் கருப்பு துணி கட்டிய நிலையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவரச சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது. Conclusion: தங்களின் கோரிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.