ETV Bharat / state

மலைச்சாலை போக்குவரத்து பாதிப்பினால் பொருட்களை தலையில் சுமந்து செல்லும் பொதுமக்கள்! - Hills Road Damaged

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைச்சாலையின் மூன்று இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

heavy-rain-affects-road-in-theni-villages
heavy-rain-affects-road-in-theni-villages
author img

By

Published : Dec 3, 2019, 9:59 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அகமலை மலைக் கிராமம் உள்ளது. போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த அகமலை ஊராட்சியில், சின்னூர், பெரியூர், அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, பட்டுர், சொக்கன்அலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் காப்பி, ஆரஞ்சு, எலுமிச்சை, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றன. இங்கு விளையும் பயிர்களை அகமலை தவிர மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் குதிரை மற்றும் கழுதைகள் முலமாக பெரியகுளம் கொண்டு வந்து விற்பனை செய்வர். அகமலை கிராமத்திற்கு மட்டுமே நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதிலும் ஜூப்களில் மட்டுமே செல்ல முடியும்.

மலைச்சாலையின் மூன்று இடங்களில் உருண்ட பாறைகள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அகமலை மலைச்சாலையில் மூன்று இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும் சாலைகளில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகளும் தொடங்காததால், இப்பகுதி மலைவாழ்மக்கள் விவசாய விளை பொருட்கள் உள்ளிட்டவைகளை தலைச்சுமையாக சுமந்து சென்று பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே விரைவில் பாறைகளை அகற்றி போக்குவரத்தினை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 10 வருடங்களாகக் கடையின் மேற்பகுதியில் குடியிருந்த 13 அடி நீள மலைப்பாம்பு!

Intro:          அகமலை மலைச்சாலையில் பாறைகள் உருண்;டு போக்குவரத்து பாதிப்பு.         
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைச்சாலையில் 3இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைவாழ் மக்களின் போக்குவரத்து பாதிப்பு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அருகே உள்ளது அகமலை மலைக் கிராமம் உள்ளது. துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த அகமலை ஊராட்சியில், சின்னூர், பெரியூர், அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, பட்டுர், சொக்கன்அலை, உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் காப்பி, ஆரஞ்சு, எலுமிச்சை, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் பயிர்களை அகமலை தவிர மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் குதிரை மற்றும் கழுதைகள் முலமாக பெரியகுளம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அகமலை கிராமத்திற்கு மட்டுமே நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு சாலை வசதி செய்து தரப்பட்டு ஜூப்களில் மட்டுமே செல்ல முடியும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அகமலை மலைச்சாலையில் மூன்று இடங்களில் பெரும் இராட்;சத பாறைகள் உருண்டு விழுந்து முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும் சாலைகளில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகளும் தொடங்காததால், இப்பகுதி மலைவாழ்மக்கள் விவசாய விளை பொருட்கன் மற்றும் உணவு பொருட்களை தலைச்சுமையாக சுமந்து சென்று பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Conclusion: எனவே விரைவில் பாறைகளை அகற்றி போக்குவரத்தினை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : அஜித்குமார் (கடப்பாறைக்குழி பகுதி மலை வாழ் மக்கள்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.