தேனி: தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா எல்லையிலான தேனி மாவட்டம் குமுளியில் உள்ள சோதனை சாவடியில் குமுளி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த குமுளியை சேர்ந்த பாபு (31) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 81 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 2,040 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குமுளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை