ETV Bharat / state

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 81 ஆண்டு சிறை தண்டனை - Kerala crime news

கேரளாவில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
author img

By

Published : Jun 23, 2022, 6:46 AM IST

கேரள மாநிலம் இடுக்கி அருகே 15 வயது சிறுமிக்கு 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதனை செய்த போது 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த 66 வயது ஜார்ஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிறுமியின் கருவின் மாதிரிகளை சேகரித்து திருவனந்தபுரம் தடயவியல் ஆய்வகத்தில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டதில் ஜார்ஜ் குற்றவாளி என்பது உறுதியானது.

மேலும், விசாரணையில் சிறுமியை அவர் 9 வயது முதல் பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, அந்த நபரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு இடுக்கி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 15 வயது சிறுமியை பாலிய வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது ஜார்ஜ் என்பது உறுதியானது. இதையடுத்து குற்றவாளி ஜார்ஜூக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிக்கு 2.2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பையடுத்து, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: காதல் விவகாரம் - கொலைக்குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.