அதிமுகவின் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகேவுள்ள கைலாசப்பட்டியில் பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தாராபுரம் நகர அதிமுக செயலாளர் காமராஜ் எடப்பாடி அணியில் இருந்து விலகி சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் வந்து இணைந்தார். பின்னர், தான் விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து தொண்டர்களை சந்திப்பதாக தெரிவித்தார்.
அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்தித்திருப்பது எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முறைகேடு புகார் எதிரொலி.. பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்!