ETV Bharat / state

தனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி! - 4 dead more than 10 are severly injured

தேனி: போடி அருகே தனியார் பேருந்து மற்றும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடி அருகே தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
author img

By

Published : Apr 7, 2019, 7:23 PM IST

தேனியில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், போடியில் இருந்து அல்லிநகரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நேருக்கு நேர் மோதி விபத்து

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்த நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்கள் அல்லிநகரத்தில் இருந்து போடியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு கர்ப்பிணி பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பழனிசெட்டிபட்டி காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை கல்லால் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro: போடி அருகே தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து, 4பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

Body: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தீர்த்ததொட்டி எனும் இடத்தில் தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தேனியில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், போடியில் இருந்து அல்லிநகரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 4பேர் சம்பவ இடத்தில் பலியானர். 10க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்தவர்கள் அல்லிநகரத்தில் இருந்து போடியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு கர்ப்பிணி பெண்ணை அழைத்து கொண்டு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: இதனிடையே சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை கல்லால் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.