ETV Bharat / state

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

நீலகிரியில் கிளண்டேல், சின்னக்கரும்பாலம், உலிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் 2 குட்டியுடன் கூடிய 9 காட்டு யானைகள் கடந்த டிச.16-ம் தேதியில் இருந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. யானைகள் குடியிருப்பு பகுதிக்கோ அல்லது சாலைக்கோ வந்து விடாமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

author img

By

Published : Jan 4, 2023, 10:31 PM IST

தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள்ரோடு, ரன்னி மேடு வனப்பகுதிக்கு இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த டிச.16-ம் தேதி வருகை தந்தது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருகை தந்த, இந்த யானைகள் உலிக்கல், சின்னக் கரும்பாலம், கிளண்டேல் போன்றப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொடர்ந்து உலா வந்தன.

இவை ஊருக்குள் வந்து விடாமல், வன ஊழியர்கள் தகரங்களை தட்டி சப்தம் எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். அவ்வப்போது வனப்பகுதிக்குள் சென்றாலும் தொடர்ந்து இவை குடியிருப்புகளுக்கு அருகில் வர முயற்சிப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்களுக்கு அடிக்கடி இந்த யானைக் கூட்டம் வந்து விடுவதால் பெரும்பான்மையான தேயிலைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளிவந்து குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டிருக்கும் இந்த யானை கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரி: சாலையில் உலா வரும் யானைகளால் மக்கள் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.