தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை தொடர் விடுமுறை நாள்களின்போது சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்படும்.
பொங்கல் தொடர் விடுமுறையொட்டி நீலகிரியில் ஏராளமான சுற்றுலாப் பயனிகள் குவித்துள்ளனர். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தற்போது சொந்த கார்கள், வாடகை வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கியப் பகுதிகளான பர்லியார், காட்டேரி, குன்னூர் பஸ் ஸ்டாண்ட், பிருந்தாவன், அருவங்காடு என பல இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களைத் தடுத்துநிறுத்தி காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ”பல இடங்களிலும் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி சோதனை செய்துவருகின்றனர். இவை நல்ல விஷயம்தான் என்றாலும், ஒவ்வொரு இடத்திலும் கூடுதல் நேரம் செலவழித்து செல்ல வேண்டிருப்பதால், சுற்றுலா மையங்களுக்கு சென்று பார்வையிட்டு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை மேற்கொண்டால், எங்களின் நேரம் வீணாகாது” என்றனர்.
இதையும் படிங்க: பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம்: மூவர் குண்டர் சட்டத்தில் கைது