தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமாராக 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். இவர்களின் வருகையை நம்பி, தோராயமாக 120 பேர் இம்மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பயணத்தடை இவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியது.
கரோனா நெருக்கடியினால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் எனக் கோரி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் இன்று (ஜூலை 27) சுற்றுலா வழிகாட்டிகள் மனு அளித்தனர். அதில், “கடந்த நான்கு மாதங்களாகவே நாங்கள் வருமானமின்றி தவித்து வருகிறோம். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டிகளாக உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். வங்கிகளின் மூலம் கடன் உதவித்தொகை பெற வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை: காவிரி நீர் பாசனத்துக்கு கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!