நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக ரேலியா அணை இருந்து வருகிறது. இந்த அணையானது 43.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து தண்ணீர் குன்னூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பருவ மழைக் காலங்களில் இந்த அணையானது அதன் கொள்ளளவை எட்டும். அதேபோல் இந்த முறையும் பருவ மழை காரணமாக தற்போது ரேலியா அணை 40 அடியை எட்டியுள்ளது. மேலும், இந்த அணைக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ரேலியா அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏதும் இல்லை. சுற்றுலா வரும் பயணிகள் அதை உணராமல் அணையின் விளிம்பு பகுதியில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: ட்ரோன் தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா - முடித்து வைத்த உக்ரைன்: 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ‘பரபர’
வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்பத்தாருடன் நடைப்பயணத்திற்காக வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கூடாரங்கள் அமைத்தும் சமையல் வேலைகள் செய்யப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கழிவறைகள் கிடையாது. இதன் காரணமாக நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் வனப்பகுதியை கழிவறையாக பயன்படுத்திகிறார்கள். இதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
குன்னூர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணைப் பகுதிக்கு இது போன்று நடைப்பயிற்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும்; சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும்; இப்பகுதியானது வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகள் நீர் அருந்த இந்த அணை பகுதிக்கு வந்து செல்கின்றன எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனித மிருக மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்றும்; உயிர்பலி ஏற்படும் முன் இப்பகுதியைச் சுற்றி உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும்; குடிநீரில் நீச்சல் அடிப்பது, மீன்பிடிப்பது, குடிநீரை அசுத்தப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் குளிக்கத் தடை - ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்..!