ETV Bharat / state

வீரர்களின் சமாதிகளில் மண் சேகரிக்கும் இசை ஆசிரியர்! - நீலகிரி செய்திகள்

நீலகிரி: வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் சமாதிகளிலிருந்து மண் சேகரித்து காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க நாடு முழுவதும் பயணித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த இசை ஆசிரியர்.

land
land
author img

By

Published : Oct 23, 2020, 1:44 PM IST

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் கோபிநாத் ஜாதவ் (43). இசை ஆசிரியரான இவருக்கு கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் போன்றோரின் சமாதிகளுக்கு சென்று அங்கிருந்து மண் சேகரித்து வருகிறார்.

அவ்வாறு சேகரித்த மண்ணை கொண்டு, ஜம்மு காஷ்மீரில் இந்திய வரைபடம் போல் அமையவுள்ள நினைவு தூணில் வைக்க உமேஷ் கோபிநாத் முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக, அவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். தொடர்ந்து, கார்கில் உள்ளிட்ட போர்களில் உயிர் நீத்தவர்கள் என இதுவரை 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். இதற்காக 67 ஆயிரம் கிலோ மீட்டர் அவர் பயணித்துள்ளார்.

வீரர்களின் சமாதிகளில் மண் சேகரிக்கும் இசை ஆசிரியர்!

அந்த வகையில், இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்த ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் மானெக்க்ஷாவின் கல்லறை அமைந்துள்ள ஊட்டி பார்சி கல்லறை தோட்டத்திற்கு வந்த உமேஷ், அங்கிருந்தும் மண் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன்படி, 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளேன்.

2021 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்த பயணத்தை முடிக்கிறேன். அதுவரை இந்திய நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள், காவல்துறையினர், துணை ராணுவ படையினர் என அனைவரின் சமாதிகளிலும் மண் சேகரித்து சென்று ஜம்மு காஷ்மீரில் நினைவு தூண் அமைப்பேன்“ என்றார்.

இதையும் படிங்க: நெல்லையில் வரையப்பட்ட சுவர் ஓவியம்: ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.