ETV Bharat / state

2ஆவது சீசன் தொடங்கியது... ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்...

உதகையில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ooty  second season in ooty  ooty tourist places  ooty season  crowd in ooty  ooty garden  உதகை  ஊட்டி  ஊட்டி பூங்கா  ஊட்டி இரண்டாவது சீசன்  சுற்றுலா
ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
author img

By

Published : Oct 1, 2022, 4:43 PM IST

உதகை: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இரண்டாவது சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி உதகையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் தொடங்கி இருப்பதாலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடபட்டுள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தாவரவியல் பூங்காவில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

பூங்காவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் 2ஆவது சீசன் மலர் கண்காட்சிகாக அலங்கார மேடைகளில் 10 ஆயிரம் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சால்வியா, மேரிகோல்ட், பிக்கோனியா, கூபியா, பாப்பி உள்ளிட்ட 30 வகையான மலர்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும் கண்ணாடி மாளிகை முன்பு 5 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு உருவாக்கபட்டுள்ள மலர் அலங்காரம் மற்றும் GO ORGANIC என்ற வாசம் அலங்காரத்தையும் பார்த்து ரசித்து புகைபடம் எடுத்து மகிழ்கின்றனர். அத்துடன் பூங்காவின் மற்ற பகுதிகளில் 4 லட்சம் மலர் செடிகளில் பூத்து குலுங்க தொடங்கி உள்ள 60 வகையான மலர்கள் ரகங்களையும் பார்த்துசெல்கின்றனர்.

இதனால் உதகையில் 2ஆவது சீசன் கலைகட்ட தொடங்கி உள்ளது. இதனிடையே தாவரவியல் பூங்காவில் 2ஆவது சீசனுக்கான மலர் கண்காட்சி திங்கட்கிழமை (அக்டோபர் 3) காலை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யபட்டு வருகிறது.

இதையும் படிங்க: "வன்முறை என்னை விரும்புகிறது, என்னால் தவிர்க்க முடியாது'...TTF வாசனின் புதிய வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.