நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் சமவெளிப் பகுதியில் உள்ள ஓட்டுநர்கள் முறையாக மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்காமல் அதிக வேகத்தில் ஓட்டிச் செல்வதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் உண்டாகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். வெலிங்டன் பகுதியில் கேரளாவுக்குச் சென்றுகொண்டிருந்த கார் திடீரென நிலை தடுமாறி தடுப்புக் கம்பியில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்,
- இரண்டாவது கியரில் மட்டுமே மலைப்பகுதியில் இருந்து கீழே நோக்கி இறங்க வேண்டும்,
- சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும், மலைப்பகுதியில்
- சாலை போக்குவரத்தை மதித்து மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சாலை விபத்துகளால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூர் வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் பாதிப்பின்றி சென்று வர முடியும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.