ETV Bharat / state

யானைகள் முகாமில் களைகட்டிய பொங்கல் விழா - Mudumalai Elephant Camp nilgiris

நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வளர்ப்பு யானைகளுக்கு பூஜைகள் செய்து, உணவு அளிக்கப்பட்டதை ஏராமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

Pongal Festival held at Mudumalai Elephant Camp, Mudumalai Elephant Camp nilgiris, யானைகள் முகாமில் பொங்கல் விழா
யானைகள் முகாமில் களைகட்டிய பொங்கல் விழா
author img

By

Published : Jan 17, 2020, 12:25 PM IST

முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு முன்னதாக முகாமிலுள்ள யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, பின் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

பின்னர், முகாமிலுள்ள உணவு கூடத்திற்கு யானைகள் அழைத்துவரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. அப்போது கிருஷ்ணா என்ற யானை மட்டும் அங்குள்ள விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அந்த யானை தனது தும்பிக்கையில் மணியைப் பிடித்துக் கொண்டு அதனை அடித்தவாறு மூன்று முறை கோயிலைச் சுற்றிவந்தது.

வேலூரில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு

அதனைத் தொடர்ந்து கோயில் வாயிலின் முன்பு முன்னங்கால்களை உயர்த்தியும், மண்டியிட்டும் பிளிரியபடி விநாயகரை வணங்கியது. அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

யானைகள் முகாமில் களைகட்டிய பொங்கல் விழா

பூஜை முடிந்தவுடன் உணவு கூடத்தில் வரிசையாக நின்றிருந்த முதுமலை, சந்தோஷ், மூர்த்தி உள்பட அனைத்து யானைகளுக்கும் பொங்கல், பழம், கரும்பு, தர்பூசனி, ஆப்பிள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

Intro:OotyBody:உதகை 16-01-20

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வளர்ப்பு யானை பூஜை செய்ததை ஏராமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். யானைகளுக்கு பல்வேறு சிறப்பு உணவுகளும் வழங்கபட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டு அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடபட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடபட்டது. முன்னதாக முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கபட்டு அலங்காரங்கள் செய்யபட்டன. பின்னர் முகாமில் உள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டு வரிசையாக நிறுத்தபட்டன. அப்போது கிருஷ்னா என்ற யானை மட்டும் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து செல்லபட்டது. அப்போது அந்த யானை தனது தும்பி கையில் மணியை பிடித்து கொண்டு அதனை அடித்தவாறு 3 முறை கோவிலை சுற்றி வந்தது. பின்னர் கோவிலின் வாயிலின் முன்பு முன்னங் கால்களை உயர்த்தியும், மண்டியிட்டும் பிளரிய படி விநாயகரை வணங்கியது. அதனை அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பூஜை முடிந்தவுடன் உணவு கூடத்தில் வரிசையாக நின்றிருந்த முதுமலை, சந்தோஷ், மூர்த்தி உள்பட அனைத்து வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு, தர்பூசனி, ஆப்பிள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிறப்பு உணவுகள் வழங்கபட்டது. அதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.
பேட்டி:தீபிக்ஷா– சுற்றுலா பயணி திருப்பூர்Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.