தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காண்ப்பாளர் சண்முகபிரியா, போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 341 தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, காவல்துறை கண்காண்ப்பாளர், போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் வாகனத்தின் தரம், உரிமம், முதலுதவி சிகிச்சைப் பெட்டி, அவசர கால வழி உள்ளிட்டவைகள் தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அங்கீகாரம் இல்லாத 26 பள்ளிகளில் மணவர்கள் சேர்க்கை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.